எனது மூன்றாவது மின்னூலைப் படித்து ரசித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. மின்னூலின் வழியாக நீங்களும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சில இடங்களுக்குச் சென்று வந்த அனுபவம் பெற்று இருப்பீர்கள் என நம்புகிறேன்.  இந்தப் பயணத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த தில்லி நண்பர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். நன்றி நண்பர்களே!

 

எடுத்த அனைத்து படங்களோடு இந்த மின்னூலின் கட்டுரைகளைப் பார்க்க விரும்புபவர்கள் எனது வலைப்பூவிலும் படிக்கலாம். “தேவ்பூமி – ஹிமாச்சல் என்ற தலைப்பில் எனது வலைப்பூவில் எல்லாப் பகுதிகளுக்குமான Drop Down Menu உண்டு! இங்கே அதிக படங்களை இணைக்க முடிவதில்லை – படங்களுக்கு மொத்த அளவு 3 MB மட்டுமே!

 

தொடர்ந்து அடுத்த மின்னூல்கள் வழியாக நட்பில் இணைந்திருப்போம்.  புத்தகம் பற்றிய உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் venkatnagaraj@gmail.com எனு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தலாம்…..

 

மீண்டும் நன்றியுடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

License

Share This Book